கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் கலந்துகொண்டோர் மதுபோதையில்..

கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் ஈடுபட்டு மதுபோதையில் வீதியில் கிடந்த 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(05) இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் கலந்துகொண்டோரே இவ்வாறு மதுபோதையில் வீதிகளில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வழங்கிய அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலமே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!