கூட்டு போர் பயிற்சி ஆரம்பம்

இந்திய – இலங்கை கூட்டு போர் பயிற்சி இன்று திருகோணமலையில் ஆரம்பமானது.

இந்தியாவின் 3 கப்பல்களும், 2 கடற்படை ரோந்து விமானங்களும் ஒரு உலங்கு வானூர்தியும் நாட்டை வந்தடைந்துள்ளன.

பயிற்சிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை கடற்படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று ஆரம்பமான இந்த கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடை​பெறும் பயிற்சிகளில் இலங்கை விமானப்படையினரும் முதற்தடவையாக இம்முறை பங்கேற்றுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவினை மேலும் வலுப்படுத்துவது மற்றும் வலய சமுத்திர பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது கூட்டு போர் பயிற்சியின் நோக்கமாகும் என கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.

Sharing is caring!