கென்யா பயணமானார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டின் விசேட அதிதியாக கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யா நோக்கி பயணமாகியுள்ளார்.

இம்மாநாடு கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறவுள்ளது.

அதற்கமைய, 4 நாட்கள் உத்தியோகபூர்வு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவிற்கு சென்றுள்ளார்.

கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யட்டானின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றாடலுக்கான சவால்கள் மற்றும் வலுவாதார நுகர்வு, உற்பத்தி ஆகியவற்றுக்கான தீர்வு என்ற தொனிப்பொருளில் கடந்த 11 ஆம் திகதி இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

அரச தலைவர்கள், அமைச்சர்கள்அ வர்த்தக பிரமுகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்களாக 4,700 பேர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பூகோல சுற்றாடல்சார் விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், சில தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!