கோத்­த­பாய ராஜ­பக்ச இனங்­க­ளு­க்கி­டை­யில் வெறுப்­பு­ணர்­வு­க­ளைத் தோற்­று­விக்க முயற்­சி

முன்­னாள் இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் வெளி­யிட்ட கருத்­துக்­க­ளைக் கார­ணம் காட்டி கோத்­த­பாய ராஜ­பக்ச இனங்­க­ளு­க்கி­டை­யில் வெறுப்­பு­ணர்­வு­க­ளைத் தோற்­று­விக்க முயற்­சித்து வரு­கின்­றார் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இந்­து­னில் துஷார அம­ர­சேன தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்­றுத் தெரி­வித்­த­தா­வது:
சில நாள்­க­ளாக நாட்­டில் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் உரை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அவர் அன்று மக்­கள் முன்­னி­லை­யில் ஆற்­றி­யி­ருந்த உரை வன்­மை­யா­கக் கண்­டிக்க வேண்­டிய விட­யம்.
இருப்­பி­னும் அவர் தனது தவறை ஒப்­புக்­கொண்டு அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார்.

இந்த நிலை­யில் முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போது விஜ­ய­க­லா­வின் உரையை நியா­ய­ப்ப­டுத்­தும் வகை­யில் பேசி­யி­ருந்­தார்.இது ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தல்­லவே! இது­வும் சிங்­கள, தமிழ் மக்­க­ளி­டை­யில் மீண்­டும் பிரச்­சி­னை­யைத் தோற்­று­விக்­கும் வகை­யில் அமைந்­துள்­ளது. ஆனால் மக்­க­ளின் நம்­பிக்­கைக்கு விரோ­த­மான செயற்­பா­டா­கவே இத­னைக் கொள்ள வேண்­டும் – என்­றார்.

Sharing is caring!