கைதிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இருதரப்பினருக்கும் இடையில் இன்று காலை பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.

இதன்போது, கைதிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் கோபுரமொன்றின் மீதேறி நேற்று காலை முதல் இன்று காலை வரை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!