கைது…கட்டுநாயக்காவில் தங்கம் கடத்திய 4 பெண்கள் கைது

நாட்டிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய பெண்கள் நால்வர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சிங்கப்பூரிலிருந்து மும்பை ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 95,71,320 ரூபா பெறுமதியானது எனவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்ல, முல்லேரியா மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!