கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை பதில் நீதவான் தீமனி பெத்தேவல முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு உதவி புரிந்து ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவை எதிர்வரும் சில தினங்களுக்குள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வாககுமூலம் பதிவு செய்யவுள்ளதாக மன்றுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறப்படவுள்ள வாக்குமூலத்திற்கு அமைய, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!