கைது செய்யப்பட்ட 15 மாணவர்கள் விளக்கமறியலில்..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் கைது செய்யப்பட்ட 15 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 நாட்களாக நிர்வாகக் கட்டடத்திற்குள் பிரவேசித்து கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 15 பேரும் நேற்று (25) காலை கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று நீதவான் ஏ.பீட்டர் போல் முன்னிலையில் இவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Sharing is caring!