கைது…போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 5 பேர் கைது

மொறட்டுவை – லுனாவ பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 5,000 போலி நாணயத்தாள்கள் 15 கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் மடிக்கணினி, ஸ்கேனர், இறப்பர் முத்திரை ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லுனாவ, கொரவெல்ல, எகொடயன, அங்குலான பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், போலி அரச சான்றிதழ்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களை அச்சிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (26) மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Sharing is caring!