கொரோனா தொற்றுநோய் தொடர்பில் கோட்டாவிற்கு கடிதமெழுதிய வலி தென்மேற்கு பிரதேசசபை!

கொரோனா தொற்றுநோய் தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவி பொருட்களை வழங்குவதற்கு சபை நிதியை பயன்படுத்த வடக்கு ஆளுனரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வலி தென்மேற்கு பிரதேச சபை கடிதம் ஒன்றினை வடக்கு ஆளுனருக்கு அனுப்பிவைத்துள்ளது.

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகாரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக நோய்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வலிகாமம் தென்மேற்கு பிரதேசம் அதாவது மானிப்பாய்ப் பகுதியில் உயர்வடைந்து வரும் வேளை அவர்களுக்கான அத்தியாவசிய தேவையான பொருட்கள் சேவைகளை வழங்குவதற்கு எமக்குள்ள சட்ட ஏற்பாட்டிற்கமைய சபை நிதியினை பயன்படுத்துவதற்கு அனுமதி தந்துதவுமாறு மிக தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இக்கோரிக்கை தொடர்பில் தங்களின் விரைவானதும், சாதகமானதுமான பதிலினை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring!