கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று மரண தண்டனை

கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்தமைக்காக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலையுண்டவரின் மனைவியை தாக்கிக் காயப்படுத்தியமை தொடர்பிலும் பிரதிவாதிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

இந்த கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முதலாவது பிரதிவாதிக்கு நான்கரை வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஏனைய இரண்டு பிரதிவாதிகளுக்கும் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதிவாதிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

Sharing is caring!