கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை கொலை செய்த இரண்டு குற்றவாளிகளுக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 04ம் திகதி அக்மீமன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமல்கம, ஹியாரே பிரதேசத்தைச் சேர்ந்த 48 மற்றும் 50 வயதுடைய இருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!