கொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றி பெறும் கொள்கைத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனைத்து காரணிகளும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றிப்பெற முடியாது எனவும், அதனால் பரந்த ஒரு பலமிக்க அணியாக தோற்றம் பெற வேண்டும் என்றும் தெரிவித்த அவர், அதற்காகவே சிறந்த வேலைத் திட்டங்கள் தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

வேட்பாளர்களினால் முன்வைக்கப்படும் வேலைத் திட்டங்கள் ஆராயப்பட்டதன் பின்னரே கட்சியின் செயற்குழுவினால் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் பிரதமர் ரணில் குறிப்பிட்டார்.

Sharing is caring!