கொள்கை வட்டி வீதத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

கொள்கை வட்டி வீதத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என மத்திய வங்கி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரூபாவின் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தௌிவுபடுத்தப்பட்டது.

சீன மத்திய வங்கி ஊடாக இலங்கைக்கு கடன் வழங்குவதற்காக மானிய வட்டி வீதத்தில் விநியோகிக்கப்படுகின்ற முறிகள் பெண்டா முறிகள் என அழைக்கப்படுகின்றது.

ஜப்பான் விநியோகிக்கும் முறிகளே சாமுராய் முறிகள் என அழைக்கப்படுகின்றது.

ரூபாவை பாதுகாப்பதற்காக இந்த வருடத்திற்குள் 184 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதிச்சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இன்று தெரியவந்தது.

காணொளியில் காண்க…

கொள்கை வட்டி வீதத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை: மத்திய வங்கி

கொள்கை வட்டி வீதத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை: மத்திய வங்கி

Posted by Newsfirst.lk tamil on Tuesday, October 2, 2018

Sharing is caring!