கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி இன்று (30) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளது.

அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு, பம்பலபிட்டி சந்தியில் ஒன்றிணைவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இன்று 12 மணியளவில் அங்கு வருமாறும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் எதிர்கால செயற்பாடுகளுக்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!