கொழும்பில் சில வீதிகள் மூடல்

வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு காலிமுகத்திடல் வீதியின் N.S.A. சுற்றுவட்டம் முதல் செரமிக் சந்தி வரையான பகுதி மூடப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளுப்பிட்டி, கொழும்பு கோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, அரச சேவையாளர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Sharing is caring!