கொழும்பில் துப்பாக்கி சூடு…பதட்டம்

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் .

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆயுததாரிகளே முச்சக்கரவண்டி ஒன்றின் மீது குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொணடுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதேவேளை, ஆயுததாரிகள் இனங்காணப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Sharing is caring!