கொழும்பு –  கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி ,ன்று முதல் மூடப்படுகிறது

பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அண்மையில் காணப்படும் கொழும்பு –  கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி இன்று (04) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

களனி பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிர்மாணப்பணிகள் காரணமாகவே, பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அண்மையில் காணப்படும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி மூடப்படவுள்ளது.

இதற்கமைய, பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அண்மையில் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த காலப்பகுதியில் மாற்றுவீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Sharing is caring!