கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் நிர்மானப்பணிகள்

 கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலம் நிர்மாணிக்கப்படுவதால், கொழும்பு முதல் கட்டுநாயக்க வரையிலான பாதையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியின் ஆரம்பப் பகுதி முதல் 200 மீட்டர் வரையான பகுதியில் போக்குவரத்துத் தடை ஏற்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை குறித்த வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Sharing is caring!