கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது

பகிடிவதை சம்பவம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைபாட்டிற்கு அமைய, பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிக்கா விஜேரத்ன தெரிவித்தார்.

நேற்று மாலை வேளையில், பல்கலைக்கழகத்தின் உணவகத்திற்குள் பகிடிவதை சம்பவம் குறித்து ​மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலின் போது காயமடைந்த மாணவரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Sharing is caring!