கொழும்பு 3,4,5,7,8 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த மின்வெட்டு

அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 3,4,5,7,8 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நாளை (28) அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாநகரின் 132 கிலோவோட் மின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகளே இதற்கு காரணம் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிவித்தது.

Sharing is caring!