கோட்­டைக்­குள் நிரந்­த­ர­மாக இரா­ணுவ முகாமை அமைக்­கும் பணி

சீனா வழங்­கிய கூடா­ரங்­களை வைத்து, யாழ்ப்­பா­ணம் கோட்­டைக்­குள் நிரந்­த­ர­மாக இரா­ணுவ முகாமை அமைக்­கும் பணியை இரா­ணு­வத்­தி­னர் ஆரம்­பித்­துள்­ள­னர்.

தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் அனு­ம­தி­யின்­றியே இரா­ணுவ முகாம் அமைக்­கு பணி தீவி­ர­மாக நடக்­கின்­றன என்று தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் பிர­திப் பணிப்­பா­ளர் பாலித வீர­சிங்க தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் கோட்டை தொல்­பொ­ருள் சின்­ன­மாக இருக்­கின்­றது. தமி­ழர்­க­ளின் போரி­யல் வர­லாற்­று­ட­னும் பின்­னிப் பிணைந்­த­தாக யாழ்ப்­பா­ணக் கோட்டை அமைந்­துள்­ளது. நெதர்­லாந்து அர­சின் நிதி உத­வி­யு­டன் கோட்டை மறு­சீ­ர­மைப்­புச் செய்­யப்­பட்­டது.கோட்­டை­யின் பாது­காப்­புப் பணிக்­காக தக­ரக் கொட்­டகை அமைத்து 10 இரா­ணு­வத்­தி­னர் தங்­கி­யி­ருந்­த­னர். தற்­போது கோட்­டைக்­குள் அதி­க­ள­வான இரா­ணு­வத்­தி­னரை நிரந்­த­ர­மாக தங்க வைக்­கும் வகை­யில், புதிய இரா­ணுவ முகாம் அமைக்­கும் பணி­யில் கடந்த சில நாள்­க­ளாக இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பாண நக­ரில் உள்ள சிறிய முகாம்­களை மூடு­வ­தற்கு, கோட்­டை­யி­னுள் தமக்கு காணி வழங்­க­வேண்­டும் என்று இரா­ணு­வத்­தி­னர் கோரிக்கை முன்­வைத்­தி­ருந்­த­னர். இந்­தக் கோரிக்­கைக்கு மாவட்­டச் செய­ல­கம் இது­வ­ரை­யில் அனு­மதி வழங்­க­வில்லை. தற்­போது கோட்­டை­யில் இரா­ணு­வம் அமைக்­கும் பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

தொல்­பொ­ருள் சின்­ன­மாக அறி­விக்­கப்­பட்­டுள்ள கோட்­டை­யில் இரா­ணு­வத்­தி­னர் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கைக்கு தமது அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என்று தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் பிர­திப் பணிப்­பா­ளர் உறு­தி­யா­கத் தெரி­வித்­தார்.

அத்­து­மீ­றிச் செயற்­ப­டும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக எத்­த­கைய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­பது தொடர்­பில் அவர் எது­வும் கூற­வில்லை.

Sharing is caring!