கோட்டபாயா உட்பட 7 பேருக்கு அழைப்பாணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி 3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று (27) அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டி.கே. ராஜபக்ஸ ஞாபகார்த்த நூதனசாலையை அமைப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான வழக்கிற்காகவே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள 2ஆவது வழக்கு இதுவாகும்.

Sharing is caring!