கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கான தருணம் வந்துள்ளது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கான தருணம் வந்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினத்தில் தமது காரியாலயத்துக்கு வருமாறும் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே இந்நாட்டிலுள்ள புத்திஜீவிகள், தொழில் துறை சார்ந்தவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

இதனால், அரசியலில் நேரடியாக பங்களிப்புச் செய்வதற்குரிய காலம் கனிந்துள்ளது. அவருக்கான அழைப்பை எமது கட்சி ஓரிரு தினத்தில் விடுக்கவுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!