கோட்டாபய ராஜபக்ஷவை விசேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (10) விசேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தங்கல்ல வீரகெடிய மெதமுலனவில் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவு கூறும் வகையில் நூதனசாலையொன்றை அமைப்பதற்கு 33 மில்லியன் ரூபா அரச நிதியை பயன்படுத்தியதாக கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இன்றைய தினம் (10) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த 27 ஆம் திகதி இவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

Sharing is caring!