கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வர முடியுமா?

குமார வெல்கம எம்.பி. என்மீதும் என் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அதீத அன்பின் காரணமாகவே தன்னைப் பற்றி அவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வர முடியுமா? என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணியிலுள்ள குமார வெல்கம எம்.பி. மஹிந்த ராஜபக்ஷதான் தலைவர், அவரல்லாத வேறு ஒருவர் வரமுடியாது எனவும், அவரையே நாம் தலைவராக கொண்டுவருவோம் எனவும் கூறியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சகலருடைய ஆதரவும் இல்லையெனவும் அனைத்து சமூகத்தின் ஆதரவையும் கொண்டஒருவராலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

Sharing is caring!