கோதுமை மா உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

தமது அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக, கோதுமை மா உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை அதிகூடிய சில்லறை விலையாக 87 ரூபாவுக்கே விற்பனை செய்யமுடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அதிக விலையில் கோதுமை மாவினை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரசபை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் திகதி இரவு கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

வரித் திருத்தம் மற்றும் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் விலை வீழ்ச்சியடைகின்றமையை கருத்திற்கொண்டு, கோதுமை மாவின் விலையை அதிகரித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!