க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் இரண்டாம் கட்ட நடவடிக்கை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்கை இடம்பெறும் நான்கு பாடசாலைகள் இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு ஆனந்தா, களுத்தறை குருகோமி, காலி சுதர்மா மற்றும் மாத்தறை சர்வேசஸ் ஆகிய 4 பாடசாலைகளுமே இவ்வாறு மூடப்பட்டிருக்கும்.

இதுதவிர, இன்னும் 20 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு மதிப்பீட்டுப் பணி முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!