க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு மேலதிக நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம்

பரீட்சை முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு மேலதிக நிலைய பொறுப்பதிகாரிகள் 2268 பேரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச துறைகளில் பணியாற்றி பல்வேறு துறைகளிலிருந்தும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் இந்த பரீட்சைக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்படும் மேலதிக பரீட்சை நிலையப் பொறுப்பாளர்களது பிரதான பணியாக பரீட்சை நடவடிக்கைகளைக் கண்காணிப்பது காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 06 ஆம் திகதி செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதற்காக 321469 பேர் தோற்றவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!