சக்தி வழிபாட்டிலே நவராத்திரி விரதம் மிகச் சிறப்புமிக்கது.

இந்துக்களிடையே சக்தி வழிபாடு மிக வும் மேலான இடத்தைப் பெறுகின்றது. சக்தி வழிபாட்டிலே நவராத்திரி விரதம் மிகச் சிறப்புமிக்கது.

நவராத்திரி விரதம் புரட்டாதி மாத வளர்பிறையின் முதல் ஒன்பது தினங்களும் நோற்கப்படுகிறது. முதல் மூன்று தினங்களும் துர்க்கைக்காகவும், அடுத்த மூன்று தினங்களும் இலக்குமிக்காகவும், இறுதி மூன்று தினங்களும் சரஸ்வதிக்காகவும் அனுஷ்டிக்கப்படுகின்றன. இவ்வழிபாட்டின் மூலம் கல்வி,செல்வம்,வீரம் என்னும் பேறுகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நவராத்தியை அடுத்து வருகின்ற விஐயதசமியன்று ஏடு தொடங்கல்,புதிதாக கலைப்பயிற்சி தொடங்குதல்என்னும் நிகழ்வுகள் பக்திபூர்வமாக நிறைவேற்றப்படும்.ஆலயங்களில் அன்று மகுடாசுரசங்காரம் விசேட அம்சமாக நிகழும். நவராத்திரி காலங்களில் பாடசாலைகள், கல்விநிலையங்கள்,அரசநிறுவனங்களில் நவராத்திரிப் பூசைகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

சிந்துவெளி காலத்தில் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழான பெண்ணின் முத்திரைசக்தி வழிபாடானது உலகப் படைப்புக்குரிய முதற்காரணமாக சக்தி விளங்குகிறாள் என்பதை குறித்து நிற்கிறது.எனவே சக்தி வழிபாட்டின் தோற்றம் சிந்துவெளியில் காணப்பட்டது எனக் குறிப்பிடலாம்.
தமிழ்நாட்டிலே சக்தி வழிபாடு பற்றி நோக்கும் போது சங்ககாலத்திலும்,சங்கம் மருவிய காலத்திலும் கொற்றவை வழிபாடு என சக்தி வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. பாலைநிலத் தெய்வமாகியகொற்றவை பிரிவுத் துயரை நீக்கும் தெய்வமாக வழிபடப்பட்டதைக் காண்கிறோம். பல்லவர் காலத்திலேகோவிற் சுவர்களில் துர்க்கைமகிடாசூரன் என்னும் அசுரனைஅழிக்கும் கதைசிற்பமாகத் தீட்டப்பட்டுள்ளது. சோழர் காலத்திலே கம்பர் ‘சரஸ்வதி தோத்திரம்’ என்னும் நூலை எழுதி சக்தி வழிபாட்டுக்கு உதவினார்.

19ம் நுற்றாண்டிலேபாரதியார், இராமகிருஷ்ண பரமகம்சர் போன்றோர் சக்தி வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள் . இன்று கண்ணகை என்றும் முத்துமாரி என்றும் வடபத்திரகாளி என்றும் பல்வேறு நாமங்களில் வழிபடப்படுகின்றது.

சக்தி விழாக்களும் விரதங்களும் பற்றி நோக்கும் போது நவராத்திரி விரதம்,கேதாரகௌரி விரதம் போன்றன சிறப்புமிக்கவை. சக்தி(துர்க்கை) மகிடாசுரன் என்னும் அசுரனைஅழித்தநிகழ்வைநினைவுபடுத்துகின்றது. நவராத்திரியைஅடுத்து மறுநாள் ஆயுதபூசை இடம்பெறும். ஒவ்வொரு தொழிலாளியும் கலைஞனும் தமது தொழில் கருவிகளை வைத்து வழிபடல் ஆயுத பூசையாகும். இதன் இறுதியில் துர்க்கை மகுடன் என்னும் அசுரனைஅழித்தகதை கூறும் மானம்பூத் திருவிழா இடம்பெறும்.

Sharing is caring!