சட்டவிரோதமாக மதுபானத்தைக் கொண்டுசென்ற சந்தேகநபர்கள் கைது

காரில் சட்டவிரோதமாக மதுபானத்தைக் கொண்டுசென்ற சந்தேகநபர்கள் இருவர் பியமக பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்ட 200 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ரணால மற்றும் பலாங்கொட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக மதுபானத்தைக் கடத்தும் செயற்பாடுகள் கடந்த பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Sharing is caring!