சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு வர்த்தகர்களைக் கைது செய்துள்ளதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் வர்த்தகர்கள் எனவும், அவர்கள் மன்னார் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (16) காலை 7.30 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்திலேயே குறித்த இருவரும் பயணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இரண்டு கிலோ மற்றும் 900 கிராம் எடை கொண்ட 29 தங்க பிஸ்கட்டுகளே சுங்க அதிகாரிகளால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!