சதுப்பு நிலத்திலிருந்து ஏழு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மகாவலி கங்கையின் பிரதான கிளையாறான பெரியாறு அமைந்துள்ள பொலன்னறுவை – புதூர் பிரதேசத்தில் சதுப்பு நிலத்திலிருந்து ஏழு யானைகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சோமாவதி சரணாலயத்திலிருந்து நீரைத் தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு யானை பெரியாற்றில் மிதந்து கொண்டிருந்ததை நான்கு நாட்களுக்கு முன்னர் பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.

அன்றைய தினமே யானையை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை.

நேற்று மீன்பிடிப்பதற்காக சிலர் அந்தப் பகுதிக்குச் சென்றபோது, நான்கு யானைகளை கண்டுள்ளதுடன் அது தொடர்பில் வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

வன ஜீவராசிகள் அதிகாரிகள் அங்கு சென்றபோது, யானைகள் இறந்து காணப்பட்டன.

யானைகள் இறப்பதற்கு முன்னர் சதுப்பு நிலத்தில் புதையுண்டிருந்தபோது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இவை.

பெரியாற்றில் பாசி படிந்துள்ளமையால் இவ்வாறு யானைகள் புதையுண்டதாக பிரதேசவாசிகள் கூறினர்.

கன ரக வாகனங்கள் இன்மையால், யானைகளின் உடல்களை வௌியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

நாளைய தினம் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் யானைகளில் உடல்களை வௌியே எடுக்கவுள்ளதாக வன ஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழு யானைகளின் உடல்கள் மீட்பு

பொலன்னறுவை – பெரியாறு பதூர் பகுதியிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து ஏழு யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Posted by Newsfirst.lk tamil on Sunday, September 2, 2018

Sharing is caring!