சதொச சீனியில் யூரியா கலப்பு

வவுனியாவில் உள்ள சதொச விற்பனை நிலையத்தில் சீனியில் யூரியா கலக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் நிலையங்கள் அலட்சியப்போக்குடன் செயற்படுவதாலேயே இவ்வாறான தவறுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

Sharing is caring!