சந்தர்ப்பம்…7 கன்னியர் மலையை பார்வையிடலாம்

மஸ்கெலியாவில் அமைந்துள்ள ஏழு கன்னியர் மலையை பார்வையிடுவதற்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – மஸ்கெலியா ஊடாக சிவனொளிபாத மலை வீதியில் 7 கன்னியர் மலை அமைந்துள்ளது.

எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக அம்பகமுவ பிரதேச சபை தலைவர் ஜயசங்க பெரேரா தெரிவித்தார்.

1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி குறித்த ஏழு கன்னியர் மலையில் இந்தோனேஷியாவின் விமானமொன்று மோதி விபத்திற்குள்ளானது.

இதில் 191 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!