சபாநாயகரால் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இன்று (19) உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை அமுல்படுத்துவதற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகரால் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்காத நிலையில், சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டியமை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ள சரத் வீரசேகர, இதனூடாக மக்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உரிமையுடன் தொடர்புடைய தமது மனுவை விரைவில் விசாரணை செய்வதற்கு திகதியொனி்றை வழங்குமாறும், சபாநாயகரின் செயற்பாடுகளில் தவறு காணப்படுவாதக உத்தரவு பிறப்பிக்குமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

Sharing is caring!