சபாநாயகருக்கு தண்டனை

பாராளுமன்ற மோதல் தொடர்பான அறிக்கையின் பின்புலம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஷெகான் சேமசிங்க கருத்து வௌியிட்டார்.

அவர் தெரிவித்ததாவது,

இந்த அறிக்கைக்கும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் இடையில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. இது இரண்டுமே பக்கசார்பானது. பாராளுமன்றத்திற்கு செல்ல தடை விதித்து, தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை உள்ளிட்ட மேலும் சில கட்டளைச்சட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சியா என்ற நியாயமான சந்தேகமொன்று எமக்கு உள்ளது. தண்டனைகளை பிரேரிக்கும் போது சபாநாயகருக்கும் நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படும் வகையில் அவர் வேண்டுமென்றே செயற்பட்டார்.

Sharing is caring!