சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதில் ஆளுந்தரப்பு பங்கேற்கவில்லை. எவ்வாறெனினும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை கொண்டுசெல்ல கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதோடு, பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
கடந்த அமர்வை ஆளுந்தரப்பு முற்றாக பகிஷ்கரித்ததோடு, இன்று பங்கேற்பது தொடர்பாக இன்னும் எவ்வித முடிவும் அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறெனினும், திட்டமிட்டபடி நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக சபை அமர்வை கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S