சமீப காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளது

இலங்கையில் சமீப காலமாக தற்கொலைகள் அதிக அளவில் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றன. இந்நிலையில்  கல்லடி பாலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலைச் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் சமூக ஆர்வலர்களால் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது.

மேலும் இச்சம்பவத்தில் கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞனே இவ்வாறு கல்லடி பாலத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாலத்தில் குதித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் விரைந்துள்ளனர்.

இவர் கல்முனை இளைஞர்சேனை செயற்பாட்டாளர் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

Sharing is caring!