சமூக தன்னார்வலர் ஒருவர் உணவு தவிர்ப்புடன் சிரமதான பணியை ஆரம்பித்திருந்தார்

இங்கிரிய, றைகம் தோட்டம் மேற்பிரிவு பிரதான வீதி பல வருடங்களாக சீர்த்திருத்தபடாத நிலையில் சமூக தன்னார்வலர் ஒருவர் உணவு தவிர்ப்புடன் சிரமதான பணியை ஆரம்பித்திருந்தார். சுமார் இரண்டரை கிலோ மீற்றர் கொண்ட இந்த வீதி பல வருடங்களாக திருத்தப்பணிகள் எதுவுமின்றி கரடு, முரடாக காணப்படுகிறது.

இதனை றைகம் தோட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளாத நிலையில் எம்.கே.குணபால என்ற சமூக தன்னார்வலர் நேற்று (18) அதிகாலை 5.00 மணியிலிருந்து 24 மணிநேரம் உணவு தவிர்ப்புடன் இடைவிடாத சிரமதான பணியை முன்னெடுத்திருந்தார்.

தனது 68 ஆவது வயதில் உடல் நிலையையும் பொருட்படுத்தாது எம்.கே.குணபால இந்த போராட்ட சிரமதான பணியை மேற்கொள்வதை அறிந்த ஹொரணை பிரதேச சபை உறுப்பினர்களான பொன்.சரவணராஜ், எம்.நடராஜ் உள்ளிட்டோர் களத்துக்கு விரைந்து சென்று அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கபாட்டுக்கு அமைய அவர் தனது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திக்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விரைவில் தோட்ட நிர்வாகம் குறித்த வீதியின் சீரமைப்பு பணியை மேற்கொள்ளாவிடின் தனது அறப்போராட்டம் மீண்டும் தொடரும் என்றும் எம்.கே.குணபால குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!