சமையல் எரிவாயுவின் விலை விரைவில் குறையும்

சமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நாட்களில் நுகர்வோர் அதிகார சபை புதிய விலைப் பட்டியலை அறிவிக்கவுள்ளது.

உலக சந்தையில் அமுலிலுள்ள விலைக்கு அமைவாக உள்ளுர் சந்தையிலும் சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சின் பணிப்பாளர் இந்திக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Sharing is caring!