சம்பா அரிசி 85 ரூபாவிற்கு விற்க இணக்கம்

சம்பா ஒரு கிலோகிராம் அரிசியை 85 ரூபா அதிகபட்ச விலைக்கு விநியோகிப்பதற்கு நெல் ஆலை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் விவசாய அமைச்சருக்குமிடையில் நேற்று (31) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நெல்லின் விலையின் இருமடங்காக அரிசியை விநியோகிப்பதற்கும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவிற்கும் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

Sharing is caring!