சம்பா வகைகள் மற்றும் நாட்டரிசியின் விலையைக் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானம்

அனைத்து சம்பா வகைகள் மற்றும் நாட்டரிசியின் விலையைக் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது.

புதிய விலையின்படி, ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 108 ரூபாவாகவும் நாட்டரிசி ஒரு கிலோகிராமின் விலை 88 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் இணக்கப்பாட்டுடன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை மற்றும் உணவு, விவசாய வர்த்தக பிரிவின் தலைவர் துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர், அரிசியின் விலை மேலும் குறைவடையும் எனவும் அவர் மேலும் தெரிவுத்துள்ளார்.

Sharing is caring!