சயுரல கப்பல் பயிற்சிக்காக பாகிஸ்தான் பயணம்

இலங்கைக் கடற்படைக்கு சொந்தமான சயுரல கப்பல் பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளது.

பாகிஸ்தானின் கடற்படையினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் (AMAN 2019) கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, குறித்த கப்பல் அங்கு சென்றுள்ளது.

28 அதிகாரிகள் உள்ளிட்ட 170 பேருடன் பாகிஸ்தான் நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ள சயுரல கப்பல், எதிர்வரும் 7ஆம் திகதியளவில் பாகிஸ்தானின் கராச்சி நகரை சென்றடையவுள்ளது.

இதேவேளை, அமான் பயிற்சிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!