சரித்திரத்தின் கறுப்பு பக்கம்

தமிழீழ போராட்ட வரலாற்றில் இந்தியா நேரிடையாக ஈழ மண்ணில் படைகளை இறக்கி தமிழர்களை அழித்து கொண்டு இருந்த காலப்பகுதி சரித்திரத்தின் கறுப்பு பக்கம் எனலாம்.

1987 ஐப்பசி 10 இந்தியபடைகளுக்கும்தமிழீழவிடுதலைபுலிகளுக்கும் போர்மூண்டது.யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து இந்தா முடித்து விடுவம் ,அந்தா முடித்து விடுவம் என்ற அறிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் எதிர்வினை சவால் விடுத்து கொண்டே இருந்தது.

புலிகளின் தலைவரும் புலிகளும் தம் தளத்தை மணலாற்றுக்கு நகர்த்தினர்.இது திருகோணமலையின் வட பகுதி.இந்த இடத்தை குறிவைத்து “ஒப்பரேசன் பவான்” ,செக் மேட் என இராணுவ நடவடிக்கை களை இந்திய இராணுவம் நிகழ்த்தியது.உண்மையில் இந்தியா தனது இராணுவ வரலாற்றில் தனக்கு தானே வைத்து கொண்ட செக்.இங்கே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றை புரிந்து செயற்பட்டார்கள் ,புலிகளை ஒடுக்கவும் ,தமிழர் போராட்டத்தை நீர்த்து போக செய்து தமிழர்களை சரணடைய வைக்கவும் ஒரே வழி தலைவர் பிரபாகரன் அவர்களை முடித்து விடுவது தான் என்று. அந்த உண்மை 2009 இல் வெளிப்பட்டது.

இந்த மணலாறு காட்டு பகுதியில் சில நூறு புலிகளை அழிக்க பல ஆயிரம் படைகளை இறக்கிய இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாய் இறக்கப்பட்ட ஆயுதம் தான் “ஜொனி”. புலிகளின் சொந்த தயாரிப்பான மிதி வெடி. பற்றரிகளையும் டெட்டனேட்டர்களையும் தவிர அனைத்தும் உள்ளூர் மூலப்பொருட்கள். அந்த களத்தில் காலை தூக்கிய ஒவ்வொரு சிப்பாயும் காலை மண்ணில் வைக்கலாமா வேண்டாமா என சிந்தித்த களமாய் மாறியது,மணலாறு மண்.செக் மேட் நடவடிக்கை 1 , 2 , 3 என சில வருடங்களுக்கு நீளவும் தோல்வியில் முடியவும் காரணமானது தான் இந்த ஜொனி மிதி வெடி. உண்மையில் இதற்கான தயாரிப்பு திட்டம் முழுக்க முழுக்க பிரபாகரன் அவர்களுடையது.

6 இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது.

பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.

இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தறையப்பட்டது.

அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும். தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதிவடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர்.

அப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.!

அதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும்.அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும்.

எல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.!

மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.

இதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது.

யுத்த களத்தில் ஒரு வீரனின் மரணத்தை விட படுகாயம் அடையும் நிலை அந்த பக்க படைகளை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கும்.களம் சென்ற சகாக்கள் கால் இல்லாமல் திருப்ப வருவத்தை பார்த்து விட்டு அந்த களத்தில் நுழையும் ஒவ்வொரு வீரனும் தனது தோல்வியை உறுதி செய்து கொண்டு களத்தில் நுழைய வேண்டிய நிர்ப்பந்தத்தில்இந்திய இராணுவம் தள்ளப்பட்டது இந்த ஜொனி மிதி வெடி.

இதனோடு மணலாறு காடு புலிகளின் எதிர்ப்பு சமருக்கு மேலும் வலுவூட்டியது.அல்லாமல் புலிகள் இதற்க்கு முன்னர் மரபு படை முறையில் யுத்தம் செய்து இருந்த போதும் மீண்டும் மணலாறு காட்டில் தம்மை கெரில்லாக்களாக மாற்றி கொண்டது இந்திய இராணுவத்தை மேலும் நிலை குலைய செய்தது.

இந்த மிதி வெடிக்கு ஜொனி என்ற பெயர் ஒரு காரணப் பெயாராகவே சூட்டப்பட்டது.இந்த மணலாறு நடவடிக்கை தொடங்க முன் பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என்று இந்திய இராணுவத்துக்கு தெரியாது.புலிகளில் போராளி ஜொனி என்பவரை இந்தியாவில் இருந்து சமாதான தூது செய்தியை தலைவரிடம் சொல்ல அனுப்பி வஞ்சகமாய் அவரை பின் தொடர்ந்து மணலாறு தான் இடம் என்பதை அறிந்து கொண்டார்கள்.புலிகளின் தூது செய்தியை மீண்டும் இந்திய அரசுக்கு சொல்ல ஜொனி திரும்ப வரும் போது இந்திய படைகள் ஜொனியை கொன்று விட்டன.

இதனால் இந்த மிதிவேடிக்கு ஜொனி அண்ணாவின் பெயரே பெயரானது.

இந்த மணலாற்று சமரில் மாத்திரமல்ல பிற் பட்ட காலப்பகுதியிலும் ஜொனி மிதி வெடி மேம்படுத்தபட்டு சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்து எதிராக பயன்படுத்தப்பட்டது.

இன்னொரு ஆபத்தைஇந்த ஜொனி எதிர்களுக்கு கொடுத்தது.பொதுவாக ஏனைய மிதிவெடிகள் 15 cm ஆழத்தில் புதைக்கபடும்.இந்த ஜொனி ஒரு சில cm ஆழத்திலேயே புதைக்கப்படும் என்பதால் அகற்றுவது கடினம்.

இன்னொரு பதிவில் ஜொனி அண்ணன் கொல்லப்பட்ட சதி பற்றி அறிந்து கொள்வோம்.மணலாறு தொடர்பான சமரை இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Sharing is caring!