சர்ச்சையை ஏற்படுத்திய பிணைமுறி வழக்கு

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மேலும் சில வழக்குகள் தொடரப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் மேலும் சில வழக்குகள் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான முதல் வழக்கு எதிர்வரும் ஒரு மாத காலத்தில் தாக்கல் செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் சுமார் ஒரு ட்ரில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன அகியோருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட உள்ளன.

Sharing is caring!