சர்வதேச நீதிபதிகள் கட்டாயம்…இலங்கைக்கு அழுத்தம்…
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாளைமறுதினம் புதன்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் இதில் உரையாற்றவுள்ள சர்வதேச நாடுகள், மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர்.
அதாவது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையையே நாளைமறுதினம் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர்.
எனினும் இதன்போது இலங்கையின் சார்பில் விவாதத்தில் கலந்துகொள்ளும் அரச தரப்புப் பிரதிநிதிகள் இந்தக்கோரிக்கையை நிராகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவே தெரிகிறது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S