சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

108 மத்திய நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜீத்த தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகவுள்ள முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள், எதிர்வரும் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் இரண்டாம்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!