சாரதி வயதெல்லை அநீதியானது….முச்சக்கரவண்டி ஓட்டுபவர்களுக்கு அநீதி

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை 35 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வயது எல்லை அதிகரிப்பானது அநீதியானதாகும்.

எனவே, குறித்த வயது எல்லையை ஆகக் குறைந்தது 25ஆக குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தாம் கூறியதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றை செலுத்தி வாழும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த நிலையில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

Sharing is caring!