சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரிவை பிரிக்க அமைச்­ச­ர­வை!!

சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரிவை இரு பிரி­வு­க­ளா­கப் பிரிப்­ப­தற்கு அனு­மதி கோரும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் அடுத்த வாரம் நடை­பெ­ற­வுள்ள அமைச்­ச­ர­வைக்கூட்­டத்­தில் முன்­வைக்­கப்­ப­டும் என்று தெரி­கி­றது.

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் உள்ள 15 பிர­தேச செய­லா­ளர் பிரி­வு­க­ளி­லும் மிகப் பெரிய நிலப்­ப­ரப்­பை­யும், அதிக கிராம சேவ­கர் பிரி­வு­க­ளை­யும் கொண்­டது சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரிவு. இத­னால் சில பகு­தி­க­ளைச் சேர்ந்த மக்­கள் தமது கரு­மங்­களை ஆற்­று­வ­தற்­காக சாவ­கச்­சே­ரிக்கு நீண்ட தூரம் பய­ணித்து வர­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அத்­தோடு பெரும் பிர­தே­சம் என்­ப­தால் செய­ல­க­மும் நிர்­வாக ரீதி­யான நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டி­ருந்­தது. இதை­ய­டுத்து சாவ­கச்­சே­ரியை இரு பிர­தேச செய­லர் பிரி­வு­க­ளா­கப் பிரிக்க வேண்­டும் என்று நீண்­ட­கா­ல­மாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.கடந்த மாதம் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நடத்­திய அபி­வி­ருத்தி தொடர்­பான கூட்­டத்­தி­லும் இந்­தக் கோரிக்கை மாவட்­டச் செய­லர் ந.வேத­நா­ய­க­னால் வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதனை தலைமை அமைச்­சர் நிரா­க­ரித்­தார். ஒரு பிர­தேச செய­ல­கம் அமைக்­கப்­ப­டு­வ­தற்­கான நிய­தி­க­ளின்­படி சாவ­கச்­சே­ரி­யைப் பிரிக்க முடி­யாது என்று அவர் கூறி­னார்.

இருப்­பி­னும் கடந்த 27ஆம் திகதி கொழும்­பில் தலைமை அமைச்­ச­ரைச் சந்­தித்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் சாவ­கச்­சேரி பிரிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை அவ­ரி­டம் வலி­யு­றுத்­தி­னர்.

உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சின் செய­லா­ள­ரி­டம் இது தொடர்­பில் கேட்­ட­றிந்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட­ன­டி­யாக சாவ­கச்­சேரி பிர­தேச செய­ல­கத்தை இரண்­டா­கப் பிரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பணித்­தார்.

அதற்­கான முதல் நட­வ­டிக்­கை­யாக சாவ­கச்­சே­ரி­யைப் பிரிப்­ப­தற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­தைப் பெற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் செவ்­வாய்க் கிழமை கூடும் அமைச்­ச­ர­வை­யில் இதற்­கான பத்­தி­ரம் முன்­வைக்­கப்­ப­டும். அங்­கீ­கா­ரம் கிடைத்­த­தும் அதனை வர்த்­த­மா­னி­யில் வெளி­யி­ட­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

Sharing is caring!